Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மொசாம்பிக் நாட்டில் வழுக்கைத் தலை நபர்கள் தொடர்கொலை!

bald

ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ளது மொசாம்பிக் நாடு. இந்த நாட்டு மக்கள் கல்வியறிவில் அதிகளவில் பின் தங்கியுள்ளனர். இதனால், இங்கே மூடநம்பிக்கை அதிக அளவில் பரவிக்கிடக்கிறது. தற்போது, 'வழுக்கைத் தலை ஆண்களின் தலையினுள் தங்கம் இருக்கிறது', 'வழுக்கைத் தலை ஆட்களைக் கொன்றால் பணம் கொழிக்கும்' என யாரோ கிளப்பிவிட, அந்த நாட்டு மக்கள் அதை உண்மை என நினைத்துக்கொண்டு வழுக்கை ஆண்களை வலைபோட்டுத் தேடிவருகிறார்கள். இதுவரை மூன்று ஆண்களைக் கொலைசெய்து மண்டையைப் பிளந்து பார்த்திருக்கிறார்கள். 

 குறிப்பாக, மிலாங்கே மாவட்டத்தில் இந்த வதந்தி வேகமாகப் பரவி, வழுக்கைத் தலையோடு சுற்றுபவர்களை  மக்கள் வெறிகொண்டு தேடுகிறார்களாம். இந்தச் செய்தியால் அதிர்ச்சியுற்ற காவல்துறை, வேகமாக செயலில் இறங்கியுள்ளது. 'இது ஒரு வதந்தி. எந்த வழுக்கைத் தலைக்குள்ளும் தங்கம் இருக்காது. ஏதேனும் தவறான முயற்சி எடுத்தால், கைதுசெய்து சிறையில் அடைத்துவிடுவோம்' என்று எச்சரித்துள்ளனர். இருந்தாலும், 'வழுக்கைத் தலையோடு வெளியே செல்லும் ஆண்கள் பாதுகாப்பாகச் செல்ல வேண்டும்' என்றும் காவல்துறை அறிவுரை கூறியுள்ளது. இதனால், வழுக்கைத் தலைகொண்ட ஆண்கள் வெளியே செல்வதற்கே பயப்படுகிறார்களாம். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close