Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அடுத்தடுத்து ஏவுகணைச் சோதனை... மீண்டும் அதிரவைத்த வட கொரியா!

தொடர் ஏவுகணைச் சோதனை, அணு ஆயுதச் சோதனை என உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையிலேயே வட கொரியாவின் செயல்கள் உள்ளன. சர்வதேச அளவிலும், ஐநா-வின் மூலமாகவும் பல எச்சரிக்கைகள் கொடுத்த பின்னரும், தன் நிலைப்பாட்டை இதுவரையிலும் வட கொரியா மாற்றிக்கொள்ளவே இல்லை.


இதற்கு, அமெரிக்கா உள்பட உலக நாடுகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்துவருகின்றன. தம் ராணுவத்தின் அதிநவீன போர் விமானங்களையும், ஜெட் ரக விமானங்களையும் கொண்டு சாகச நிகழ்ச்சி நடத்தியது. இதை, அந்த நாட்டு அதிபர் 'கிம் ஜாங் உன்' கண்டு ரசிப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகின.


இந்நிலையில், வட கொரியா நான்கு கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளைச் சோதனைசெய்துபார்த்துள்ளது. இந்த ஏவுகணைகள், 200 கி.மீ. தொலைவுக்குப் பறந்து கடலில் விழுந்தன. இந்த ஏவுகணைகள், தரையிலிருந்து புறப்பட்டுச் சென்று, எதிரியின் கப்பலைக் குறிவைத்துத் தாக்கும் வல்லமை படைத்தவை எனக் கூறப்படுகிறது. இதற்கு, அமெரிக்கா மற்றும் தென் கொரியா மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளன. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close