Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிரிட்டன் தேர்தல்: தொழிலாளர் கட்சி முந்துகிறது... தெரசா மே பின்னடைவு..!

இங்கிலாந்தில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை, எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி முந்தி வருகிறது. 


இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் ஆட்சிக்காலம் 2020 ஆம் ஆண்டுதான் நிறைவடைகிறது. ஆனால், ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையைத் தொடர்ந்து, பிரதமர் தெரசா மே முன்னதாகவே தேர்தலை அறிவித்தார். அதைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் 650 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. தெரசா மே-யின் கன்சர்வேடிவ் கட்சி மற்றும் தொழிலாளர் கட்சிக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே, வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில், தெரசா மே-யின் கன்சர்வேடிவ் கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலை வகித்தாலும், பெரும்பான்மை இடங்களைப் பிடிக்க இயலவில்லை. ஆனால், இரண்டாம் கட்ட வாக்கு எண்ணிக்கையில், தொழிலாளர் கட்சி முன்னிலைபெறத் தொடங்கியது. இதுவரை, ஜெர்மி கார்பினின் தொழிலாளர் கட்சி 101 தொகுதிகளிலும் தெரசா மே-யின் கன்சர்வேடிவ் கட்சி 79 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close