Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சீனாவை புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்தித்து இருநாடுகளுக்கும் நடுவே உள்ள வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட்டு செயல்படுவோம் என பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர்.

மோடி- ஜின்பிங்

ஆறு நாடுகள் பங்கேற்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு கஜகஸ்தானில் நடைபெறுகிறது. மத்திய ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் அமைதியை நிலைநாட்ட, இந்தக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய ஆறு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்தக் கூட்டமைப்பில் இந்தியாவும் பாகிஸ்தானும் முழு உறுப்பினர்களாக இன்று புதிதாக இணைந்துள்ளன.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அஸ்தானா நகரில் உள்ளார். இன்று மாநாட்டு நிகழ்வில் சீன அதிபர் ஷி ஜின்பிங்- பிரதமர் மோடி இருவரும் சந்தித்து வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். இருவரும் இருநாட்டு நல்லுறவுகளை மேம்படுத்தும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கலந்துரையாடியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மோடி, ‘ஷாங்காய் மாநாட்டில் இந்தியா உறுப்பினராவதற்கு பெரிதும் உதவி புரிந்த சீனாவுக்கு மிகவும் நன்றி. அதிபர் ஷி ஜின்பிங்கை திரும்பவும் சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவுக்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு நன்றி. இந்தியா- சீனா உறவு மேம்பாடு குறித்து கலந்துரையாடினோம்’ என்றார்.

இதுகுறித்து தனது கருத்தை ட்விட்டர் பக்கத்திலும் பதிவு செய்துள்ளார் மோடி. சீனாவின் ‘ஒரு பெல்ட் ஒரு ரோடு’ திட்டத்தை இந்தியா மறுத்த சில நாள்களிலேயே சீனாவுடனான இந்திய சந்திப்பு முன்னதாக எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close