Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பதவி விலகுகிறார் ஜப்பான் மன்னர்... நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றம்

ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ பதவி விலகுவதற்காக, ஜப்பான் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜப்பான்

ஜப்பானில் தற்போது அரசுக்கு உட்பட்ட மன்னராட்சி முறை நடைமுறையில் உள்ளது. அந்நாட்டின் மன்னராக அகிஹிட்டோ (83 வயது) உள்ளார். இவர் ஜப்பானின் 125-வது மன்னராவார். இதனிடையே வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக அவர் பதவி விலகுவதாக அறிவித்தார். மேலும் தனது பொறுப்புகளை மற்றொருவரிடம் ஒப்படைப்பதுதான் நல்லது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதையடுத்து இன்று ஜப்பான் நாடாளுமன்றத்தில், அகிஹிட்டோ பதவி விலகுவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஜப்பான் நாடாளுமன்றத்தின் இரு சபையிலும் இதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து இளவரசர் நரிஹிட்டோ மன்னர் பதவியை ஏற்கவுள்ளார். கடந்த 200 ஆண்டுகளில் ஜப்பானில் மன்னர் ஒருவர் பதவி விலகியதே கிடையாதாம்!

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close