Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’இங்கு இதற்கு மட்டும்தான் தட்டுப்பாடு’... கத்தாரில் வசிக்கும் சென்னை இளைஞரின் ஸ்டேட்மென்ட்!

கத்தார் நாடு தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி சவுதி அரேபியா, ஐக்கிய அரேபிய நாடுகள், எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள், தூதரகத் தொடர்புகள் உள்பட கத்தாருடனான அத்தனை தொடர்புகளையும் துண்டிப்பதாக அறிவித்தன. இது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

qatar
 

இந்நிலையில் கத்தாரில் வசிக்கும் சென்னை இளைஞர் தினேஷை ஃபேஸ்புக்கில் தொடர்பு கொண்டு அங்கு நிலைமை எப்படி இருக்கு என்று கேள்வியெழுப்பினோம்... அதற்கு அவர் கூலாக அளித்த பதில் பின்வருமாறு...

“அம்மா  தொலைப்பேசியில் அழைத்து கத்தாரில் பதற்றமான சூழல் நிலவுவதாக டி.வியில் சொல்கிறார்களே.. நீ சென்னை வந்துவிடு என்றார்கள். அம்மா சொன்னப் பிறகுதான் இந்த தடை விவகாரம் குறித்து எனக்கே தெரியும். அவர்களை சமாதானப்படுத்தி நான் நலமாக இருக்கிறேன் பயப்படத் தேவையில்லை என்றேன். நான் கத்தார் விமான நிலையம் அருகே உள்ள Abu Hamour பகுதியில் வசிக்கிறேன். சவுதி உள்ளிட்ட நாடுகள் விதித்த தடையால் இங்கு இயல்பு நிலை பாதிக்கப்படவில்லை. நாங்கள் அனைவரும் பாதுக்காப்பாகதான் இருக்கிறோம்.

qatar
 

தடை உத்தரவைத் தொடர்ந்து உணவுப் பொருள்களுக்கு மட்டும்தான் கொஞ்சம் தட்டுப்பாடு நிலவியது. முக்கியமாக பாலுக்கு அதிகம் தட்டுப்பாடு ஏற்பட்டது. சவுதியில் இருந்துதான் கத்தாருக்கு பால் சப்ளை செய்யப்படும். எனவே இரண்டு நாள்களாக பாலுக்கு தட்டுபாடாக இருந்தது. ஆனால் கத்தார் அரசு அதையும் சரி செய்துவிட்டது. தற்போது உணவு பொருள்கள் வழக்கம்போல்  சூப்பர் மார்கெட்டுகளில் விற்கப்படுகிறது. ஆனால் காய்கறிகளின் விலைமட்டும்  உயர்ந்துவிட்டது. முன்னர் உருளைகிழங்கின் விலை இந்திய மதிப்பில் கிலோ 40 ரூபாய்க்கு கிடைத்தது. ஆனால் தற்போது உருளைக்கிழங்கின் விலை 120 ரூபாய்” என்று பேசி முடித்தார் சற்று வருத்தத்துடன்!

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close