Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

செவ்வாய் கிரகம் குறித்து நாசா விஞ்ஞானிகள் புதுத் தகவல்!

செவ்வாய் கிரகத்தில் புற்றுநோய் உருவாக்கக்கூடிய கதிர்வீச்சுகள் அதிக அளவில் இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கிறதா என்று விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவின் நாசா, ரஷ்யாவின் ஈசா, இந்தியாவின் இஸ்ரோ உள்ளிட்ட விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் செவ்வாய் கிரகத்தின் தன்மை குறித்து தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர். அவ்வப்போது புதிய புதிய தகவல்களையும் புகைப்படங்களையும் வெளியிடுகின்றனர். இந்த நிலையில் நாசா விஞ்ஞானிகள் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

நாசா விஞ்ஞானிகள், செவ்வாய் கிரகத்துக்கு கியூரியாசிட்டி ரோவர் விண்கலத்தை அனுப்பி வைத்துள்ளனர். அதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் பூமியை விட 1,000 மடங்கு கதிர்வீச்சு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கதிர்வீச்சுகள் புற்றுநோய் உருவாக்கும் தன்மையுடையன என்றும் தெரியவந்துள்ளன. அமெரிக்காவின் நவேடா பல்கலைக்கழகக் குழு விண்வெளிக்கு சென்ற வீரர்களின் உடல் நலத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தொடர்பாக நடத்திய ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close