Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''பேட்மேன்'' தொடர் புகழ் ஆடம் வெஸ்ட் காலமானார்!

 

பேட்மேன் டி.வி தொடரில் நடித்த நடிகர் ஆடம் வெஸ்ட் காலமானார்.

 

 


1928 ஆம் ஆண்டு, வாஷிங்டனில் பிறந்தவர் ஆடம் வெஸ்ட். அவரது இயற்பெயர் வில்லியம் வெஸ்ட் ஆண்டர்சன் ஆகும். நடிப்புத்துறைக்காக, தனது பெயரை ஆடம் வெஸ்ட் என்று மாற்றிக் கொண்டார். கடந்த 1960-ல் எடுக்கப்பட்ட பேட்மேன் தொலைக்காட்சி தொடரில், ஆடம் வெஸ்ட்தான் பேட்மேன் கதாபாத்திரத்தில் நடித்தார்.


சுமார் மூன்று ஆண்டுகள் ஒளிபரப்பான இந்தத்தொடர் மூலம், ஆடம் வெஸ்ட் புகழின் உச்சிக்கு சென்றார். உலகம் முழுவதும் அவருக்கு பல்வேறு ரசிகர்கள் உண்டு. இந்நிலையில், இரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஆடம் ஸ்மித் உயிரிழந்தார். அவருக்கு வயது 88. இந்தத் தகவலை அவரது உறவினர்கள் மூலம் சமூக வலைதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து, ஆடம் வெஸ்ட்டின் மறைவுக்கு, உலகம் முழுவதும் அவரது ரசிகர்கள் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close