Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பேஸ்புக்கில் கருத்தைப் பதிவிட்டவருக்கு மரண தண்டனை வழங்கிய பாகிஸ்தான் நீதிமன்றம்..!

பாகிஸ்தானில், இஸ்லாமிய மதம் குறித்து எதிர்மறையான கருத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை அளித்துள்ளது. இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாகிஸ்தானின் ஒகாரா பகுதியைச் சேர்ந்த டைமூர் ராசா என்பவர் இஸ்லாமிய மதம் குறித்து இழிவான கருத்தை பேஸ்புக்கில் பதிவிட்டதாக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் பாகிஸ்தானின் சிறுபான்மை ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர். இதுதொடர்பான வழக்கு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஷபீர் அகமது, அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். பேஸ்புக்கில் கருத்தைப் பதிவிட்டதற்கு மரண தண்டனை அளிப்பது பாகிஸ்தானில் இதுவே முதல்முறையாகும். பாகிஸ்தானில் சுமார் 97 சதவீத மக்கள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுகின்றனர். அங்கு இஸ்லாம் மதம் குறித்து தவறான கருத்துகளை பரப்புபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close