Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கவுதமாலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோளில் 6.9 ஆகப் பதிவு!

கவுதமாலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.9 ஆகப் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கம்

கவுதமாலா நாட்டிலுள்ள தாஜுமுல்கோவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஏழு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளார். தாஜுமுல்கோ நகரின் தென்மேற்கே 8 கிலோமீட்டர் தூரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.9 புள்ளிகளாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என உள்நாட்டு ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கவுதமாலாவில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் 15 முறை மிதமான மற்றும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன என்று அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close