Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் காயம்

அமெரிக்காவில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவ் ஸ்கேலிஸை மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார். குண்டடிப்பட்ட ஸ்கேலிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த லூசியானா பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவ் ஸ்கேலிஸ், விர்ஜினியா மாகாணத்தில் பேஸ்பால் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அவருடன் அவரது உதவியாளர்களும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர், திடீரென அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அதில் ஸ்கேலிஸ் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு குண்டடிப்பட்டது.

அங்கு வந்த காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபரைக் கைது செய்தனர். காயமடைந்த ஸ்கேலிஸ் மற்றும் அவரது உதவியாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஸ்கேலிஸ்க்கு இடுப்புப் பகுதியில் குண்டு பாய்ந்தது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், 'என்னுடைய நண்பர் மற்றும் தேசப்பற்றுமிக்கவர் குண்டடிக் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் நலமடைவார். என்னுடைய பிரார்த்தனை எப்போதும் அவருடன் இருக்கும்' என்று பதிவிட்டிருந்தார்.

இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close