Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லண்டன் கட்டட தீ விபத்து: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!

லண்டனில் இன்று அதிகாலை 24 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் இறந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லண்டனில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள 'கிரென்ஃபெல் டவரில்' இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. 24 மாடிகள்கொண்ட இந்தக் கட்டடத்தில், 100-க்கும் மேலான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தக் கட்டடம் 1947 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. சுமார் 600 பேருக்கு மேல் வசித்து வந்த இந்த கட்டடத்தில், தீ விபத்து காரணமாக இதுவரை 12 பேர் இறந்துள்ளதாக லண்டன் போலீஸ் தரப்பு தகவல் கூறியுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இன்னும் கட்டடத்திலேயே சிக்கி இறந்தவர்கள் பற்றி முழு விபரம் தெரியாத நிலை உள்ளது. 

அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து, சிறிது நேரத்தில் கட்டடம் முழுவதும் பரவியது. சுமார் 200 தீயணைப்பு வீரர்கள், மற்றும் 40 தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்

மீட்புப் பணிகள் இன்னும் முடிவுறாத நிலையில் லண்டன் போலீஸ் தரப்பு, 'தீ விபத்து என்பதால், மீட்பு பணிகளில் ஈடுபடுவது சிக்கலாக இருக்கிறது. மீட்பு பணிகள் முடிவு பெற சில நாள்கள் எடுக்கலாம்.' என்று கூறியது.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close