Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உயிரை காப்பாற்ற 10-வது மாடியிலிருந்து குழந்தையை தூக்கி எறிந்த தாய்!

லண்டனில் இன்று அதிகாலை 24 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் இறந்துள்ளனர். இந்த தீ விபத்தில் தனது குழந்தை இறந்துவிடக் கூடாது என்று நினைத்த ஒரு தாய், குழந்தையை 9 அல்லது 10-வது மாடியிலிருந்து கீழே தூக்கி போட்டுள்ளதாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் கூறுகின்றனர். தூக்கி எறியப்பட்ட குழந்தையை கீழே இருந்த ஒரு நபர் சரியான நேரத்தில் பிடித்ததாகவும் கூடுதல் தகவல் கூறப்படுகிறது. தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பலர் அடுக்கு மாடி கட்டடத்தில் இருந்து குதித்த சம்பவங்கள் நிறைய நடந்துள்ளதாக இங்கிலாந்து ஊடகங்கள் கூறுகின்றன.

லண்டனில் 24 அடுக்குகள் கொண்ட 'கிரென்ஃபெல் டவரில்' நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. லண்டனில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது, 'கிரென்ஃபெல் டவர்'. 24 மாடிகள் கொண்ட இந்தக் கட்டடத்தில், 100-க்கும் மேலான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தக் கட்டடம் 1947 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த கட்டடத்தில் 120 பிளாட்கள் இருந்ததாகவும், அதில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. சுமார் 600 பேருக்கு மேல் வாழ்ந்து வந்த இந்த கட்டடத்தில், தீ விபத்து காரணமாக இதுவரை 12 பேர் இறந்துள்ளதாக லண்டன் போலீஸ் தரப்பு தகவல் கூறியுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இன்னும் கட்டடத்திலேயே சிக்கி இறந்தவர்கள் பற்றி முழு விபரம் தெரியாத நிலை உள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. 

மீட்பு பணிகள் இன்னும் முடிவுறாத நிலையில் லண்டன் போலீஸ் தரப்பு, 'தீ விபத்து என்பதால், மீட்பு பணிகள் சிக்கலாக இருக்கிறது. மீட்பு பணிகள் முடிவு பெற சில நாள்கள் எடுக்கலாம்.' என்று கூறியது.  
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close