Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அயர்லாந்தின் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தேர்வு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 38 வயதான லியோ வரத்கர், அயர்லாந்தின் இளம் பிரதமராக நேற்று தேர்வுசெய்யப்பட்டார். 

லியோ வரத்கர் 

 

அயர்லாந்தில், பைஃன் கேயல் கட்சியின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. அந்தக் கட்சியைச் சேர்ந்த என்டா கென்னி பிரதமராக இருந்தார். அவர், தனது பதவியை இந்த ஆண்டு தொடக்கத்தில் ராஜினாமாசெய்ததை அடுத்து, அங்கு நாடாளுமன்றத் தலைவருக்கான ஓட்டெடுப்பு நடைபெற்றது. இந்த ஓட்டெடுப்பில், 57 பேரில் 50 பேரின் ஆதரவையும் 60 சதவிகித வாக்குகளையும் பெற்று, நாட்டின் 11-வது பிரதமராக லியோ வரத்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விரைவில் அயர்லாந்தின் அடுத்த பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். 

மும்பையை பூர்விகமாகக் கொண்டவர், லியோ வரத்கரின் தந்தை அசோக் வரத்கர். மருத்துவரான இவர், 1960 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் குடியேறியவர். அவருக்கும் அயர்லாந்தின் நலத்துறை அமைச்சரான மிரியம் தம்பதிக்கும் மகனாகப் பிறந்தவரே லியோ வரத்கர். இவர் 1978 ஆம் ஆண்டில் டப்ளினில் பிறந்தார். 2003 ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பை முடித்து, மருத்துவராகப் பணியாற்றி வந்தார். கத்தோலிக்க மக்கள் அதிக அளவில் வாழும் நாடுகளுள் ஒன்றான அயர்லாந்தின் முதல் ஓரினச் சேர்க்கை பிரதமருமாவார் வரத்கர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close