Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ட்ரம்பைப் போல நடித்து அசத்திய ஆஸ்திரேலிய பிரதமர்!

ஆஸ்திரேலியாவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், அமெரிக்க அதிபர் ட்ரம்பைப் போல பேசி காட்டியுள்ளார் ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல்.

ட்ரம்ப்

ஆஸ்திரேலியாவின் 29-வது பிரதமராக செயல்படுபவர் மால்கம் டர்ன்புல். 62 வயதான இவர், லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்டு பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே ஆஸ்திரேலியாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போல மிமிக்கிரி செய்துள்ளார். இதன் ஆடியோ பதிவுகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த ஆடியோவில் அவர் ட்ரம்ப்பை சந்தித்தது குறித்தும், அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு குறித்தும் நகைச்சுவையாகப் பேசியுள்ளார். இது குறித்து டர்ன்புல் கூறுகையில், 'இது நகைச்சுவைக்காகப் பேசியது. இது வெறும் அன்பும், மரியாதையும் கலந்த ஒரு கிண்டல்தான்' எனக் கூறியுள்ளார். அமெரிக்கத் தூதரகமும், 'டர்ன்புல் நகைச்சுவையாகப் பேசியதை நாங்கள் கடுமையாக எடுத்துக் கொள்ளவில்லை' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், அவர் டர்ன்புல்லிடம் தொலைபேசியில் பேசியது குறிப்பிடத்தக்கது.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close