Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு: 6 பேர் பலி!

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் உள்ள பிரபல மசூதி  ஒன்றின் அருகே குண்டு வெடித்ததில்  6 பேர் பலியானதாகவும், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

காபூல் குண்டிவெடிப்பு 

காபூலின் தெற்குப்பகுதியில் உள்ளது அல்ஜீரா மசூதி. இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பு கடைபிடித்து வரும் நாள்கள் என்பதால்,  இந்த மசூதியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றதாக தெரிகிறது. அப்போது, வெடிகுண்டுகளை உடலில் கட்டிக்கொண்டு வந்த தற்கொலைப்படையினரே இந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளனர் என்று அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலையடுத்து சிறப்பு அதிரடிப்படை அந்த பகுதிக்கு விரைந்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நஜீப் டேன்ஷெவ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இந்த தற்கொலை படையினரின் குண்டு வெடிப்புக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே, இதே நகரத்தில் கடந்த மே மாதம் நடந்த வெடிகுண்டு விபத்தில் 90 பேர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பு கடைபிடித்து வரும் நாள்களிலேயே, இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருவது அப்பகுதி மக்களை அச்சத்திலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close