Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குல்பூஷன் வழக்கில் இந்தியாவின் கோரிக்கையை சர்வதேச நீதிமன்றம் நிராகரித்துவிட்டதாக பாக். ஊடகங்கள் தகவல்!

குல்பூஷன் ஜாதவ் வழக்கில் கால அவகாசம் கேட்ட இந்தியாவின் மேல்முறையீட்டு மனு சர்வதேச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது எனப் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

குல்பூஷன் ஜாதவ்

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும், பலுசிஸ்தான் மாகாணத்தில் வன்முறையைத் தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் கூறி,  மார்ச் மாதம் பாகிஸ்தான் ராணுவத்தால் குல்பூஷன் ஜாதவ் கைதுசெய்யப்பட்டார். இதையடுத்து அவர், பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டது. பாகிஸ்தானின் இந்தச் செயலுக்கு, இந்தியா கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தது. குல்பூஷனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக, நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்றத்தில், இந்திய அரசு சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில் இந்தியா மேல்முறையீடு செய்ய ஆறு மாத காலம் அவகாசம் கேட்டதாகவும், இதை மறுத்த சர்வதேச நீதிமன்றம் வருகிற செப்டம்பர் மாதம் மனு சமர்ப்பித்திருக்க வேண்டும் என இந்தியாவின் வேண்டுகோளை மறுத்ததாகப் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. மேலும், பாகிஸ்தான் பதில் மனுத் தாக்கல் செய்ய டிசம்பர் வரை சர்வதேச நீதிமன்றம் கால அவகாசம் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இதுகுறித்து இதுவரையில் இந்தியாவின் சார்பில் எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close