Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கர்நாடகத்தைச் சேர்ந்த இளைஞர் சர்வதேசக் குற்றவாளியாக அறிவிப்பு!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முகமது ஷபி அர்பரை சர்வதேச குற்றவாளியாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.


இந்தியாவில் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பதாகக் கர்நாடக மாநிலம் பாட்கல் நகரைச் சேர்ந்த முகமது ‌ஷபி அர்மரை இந்திய அரசு தேடிவருகிறது. டெல்லியிலும், ஹரித்துவாரில் அர்த் கும்பமேளாவிலும் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக இவர் உள்பட 6 பேர்மீது தேசிய புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இன்னும் பல்வேறு முக்கியமான வழக்குகளில் தேடப்பட்டு வரும் முகமது ஷபி அர்மர் தனது சகோதரருடன் பாகிஸ்தானுக்குச் சென்றார்.

ஏற்கெனவே அவர்மீது சர்வதேச காவல்துறை 'ரெட் கார்னர்' நோட்டீஸ் அளித்துள்ளது. இந்த நிலையில், முகமது ஷபியை சர்வதேச குற்றவாளியாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. எனவே, அர்மர்மீது பொருளாதாரத் தடை விதிக்கும் நடவடிக்கையும் எடுக்கத் தொடங்கியுள்ளது. வங்கிக் கணக்குகள் முடக்கம், வர்த்தகம் முடக்கம் ஆகிய நடவடிக்கைகளை அமெரிக்கா தொடங்கும் எனத் தெரிகிறது. பாகிஸ்தானில் ஆளில்லா விமானத் தாக்குதலில் அர்மர் பலியாகிவிட்டதாகவும் அவ்வப்போது வதந்திகள் பரவிவருகின்றன. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close