Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெண் ஓரினச் சேர்க்கையாளர் செர்பியா பிரதமரானார்!

செர்பிய நாட்டின் பிரதமராக அனா பாபிக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர், அந்நாட்டில் முதல் பெண் மற்றும் ஓரினச் சேர்க்கை பிரதமர் ஆவார். 


செர்பிய நாட்டின் அதிபராக, அலெக்சாண்டர் வூசிக் இருந்துவருகிறார். அவர் நேற்று அந்நாட்டின் பிரதமராக அனா பாபிக்கை தேர்ந்தெடுத்துள்ளார். அனா, இங்கிலாந்து நாட்டிலுள்ள ஹல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். கடந்தாண்டு அரசியலில் கால் பதித்த அனா, செர்பியாவின் பொது நிர்வாகத்துறை அமைச்சராக இருந்தார். இவர் தன்னை ஓரினச் சேர்க்கையாளராக அறிவித்திருந்தார். செர்பியாவின் முதல் ஓரினச் சேர்க்கை அமைச்சராகவும் இவர்தான் இருந்தார்.

இவர் தற்போது, செர்பியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். செர்பியா நாட்டின் முதல் பெண் மற்றும் ஓரினச் சேர்கை பிரதமர் அனா பாபிக்தான். கடந்த வாரம் லியோ வரதாகர் என்பவர் அயர்லாந்தின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரும் ஓரினச் சேர்க்கையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close