Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கறுப்புப்பண விவரங்களை இந்தியாவுக்கு அளிக்கத் தயார்: சுவிட்சர்லாந்து அறிவிப்பு!

கறுப்புப்பண விவரங்களை இந்தியாவிடம் கொடுப்பதற்கு உறுதியளிக்கிறோம் என சுவிட்சர்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

கறுப்புப் பணம்

சுவிஸ் வங்கிகளில் பதுக்கிவைக்கப்பட்டிருக்கும் கறுப்புப்பண விவரங்கள் தானியங்கி முறையில் இந்தியாவுக்கு வழங்கப்படுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பியக் கூட்டமைப்பின் மிகப்பெரிய ஆட்சி அமைப்பான சுவிஸ் ஃபெடரல் கவுன்சில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி சுவிஸ் வங்கிகளிலுள்ள கறுப்புப்பண விவரங்கள் தானியங்கி முறையில் இந்தியாவுக்குப் பரிமாற்றம் செய்யப்படும் திட்டத்தை 2018-ம் ஆண்டு அமலுக்குக் கொண்டுவரவுள்ளது. இத்திட்டம் அமலுக்கு வந்ததும், இதற்கான பதிவேற்றங்கள், மென்பொருள் மேற்பார்வை ஆகியவை சீரமைக்கப்பட்டு 2019-ம் ஆண்டு அத்தனை தரவுகளும் இந்தியாவிடம் அனுப்பப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரகசியத்தன்மை, வாடிக்கையாளரின் தரவுகள் பாதுகாப்பு எனப் பல காரணங்கள் இதுவரையில் சொல்லப்பட்டு வந்தாலும், அத்தனையும் விடுத்து தற்போது சுவிட்சர்லாந்து அரசாங்கம் இந்தியாவுக்கு அத்தனை விவரங்களையும் அளிக்க முன்வந்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close