Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐ.எஸ் இயக்கத் தலைவர் பாக்தாதி உயிரிழப்பா? ரஷ்யா தகவல்!

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத் தலைவர் பாக்தாதி கொல்லப்பட்டதாக, ரஷ்யா தெரிவித்துள்ளது.

abu bakr al-baghdadi


உலகையே அச்சுறுத்தி வரும் ஐ.எஸ் இயக்கத்தின் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி. இவர் அண்மையில் ஈராக்கிலிருந்து வெளியேறி, சிரியாவின் மொசூல் நகரில் தலைமறைவானதாகக் கூறப்பட்டது. இவர் உயிரிழந்து விட்டதாக, அவ்வப்போது செய்திகள் வரும். ஆனால், இது குறித்த அதிகாரபூர்வ தகவல் ஏதும் ஐ.எஸ் தரப்பிலிருந்து வெளியிடப்படாமல் இருந்து வந்தது.

ஏற்கெனவே அவரது தலைக்கு 25 மில்லியன் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ரஷ்ய பாதுகாப்புத் துறை இன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், 'மே மாத இறுதியில் சிரியாவின் ராக்கா நகரில், வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 30 தீவிரவாதக்குழுக்களின் 300 தீவிரவாதிகள் வரை உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக, ஐ.எஸ் தீவிரவாதத் தலைவர் பாக்தாதியும் உயிரிழந்துள்ளார். அவருடன் சேர்ந்து மேலும் சில ஐ.எஸ் தளபதிகளும் மரணமடைந்தனர்', என்று கூறியுள்ளது. ஆனால், பாக்தாதி குறித்து ஐ.எஸ் தரப்பிலிருந்து எதுவும் கூறப்படவில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close