Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரே அறையில் 42 கருகிய உடல்கள் கண்டெடுப்பு? லண்டனில் பரவும் தகவல்

தீ விபத்து

கடந்த வாரம் லண்டன் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து நடந்தது. இதில் முப்பதுக்கும் மேற்பட்டோர் தீயில் கருகி உயிரிழந்ததாக சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த கட்டடத்தின் ஒரே அறையில் மட்டும் 42 உடல்கள் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்த பகுதிவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 14ஆம் தேதி மேற்கு லண்டனில் உள்ள க்ரீன்பெல் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 30க்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டதாக அந்தநாட்டு அரசு அறிவித்திருந்தது. தற்போது அந்த கட்டடத்தில் இறந்தவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 'ஒரே அறையில் மட்டும் 42 கருகிய உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்த பகுதிவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த தகவலை லண்டன் அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close