Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

களத்தில் இறங்கியது சவூதி- துருக்கி! கத்தார் பிரச்னைக்கு விரைவில் தீர்வு?

துருக்கி அதிபர் தய்யிப் எர்டோகன், சவூதி அரேபியா மன்னர் சல்மானுடன் கத்தார் பிரச்னை குறித்து பேசியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

ERDOGAN

சில வாரங்களுக்கு முன், 'கத்தார் தீவிரவாதத்துக்கு நிதி உதவி செய்கிறது' என்று கூறி சவூதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள், கத்தாருடனான தூதரக உறவை துண்டித்துக்கொண்டன. ஆனால் கத்தாரோ, 'இந்தக் குற்றச்சாட்டுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது' என்று கேள்வியெழுப்பியதற்கு இதுவரை மற்ற நாடுகளிடமிருந்து எந்தப் பதிலுமில்லை. மேலும், கத்தாருக்குச் செல்லவேண்டிய உணவு உள்ளிட்ட அடிப்படை பொருள்களையும் மற்ற நாடுகள் அனுப்பி வைப்பதில் சுணக்கம் காட்டின. இதனால், மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு அகதிகள் பிரச்னை தலைவிரித்தாடுமோ என்ற அச்சம் அதிகரித்தது. நிலைமை இப்படி இருக்க, இந்தப் பிரச்னையின் ஆரம்பம் முதலே துருக்கி அதிபர் எர்டோகன், கத்தாருக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்தார். 

இந்நிலையில்தான் அவர், சவூதி மன்னருடன் தொலைபேசியில் பேசி, கத்தார் பிரச்னைக்கு சுமுக முடிவு ஏற்படுத்தும் செயலில் இறங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  கத்தாரில், துருக்கியின் ராணுவத் தளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close