Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

 ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகளுக்கு கிரிக்கெட் டெஸ்ட் அங்கீகாரம்

தற்போது இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்தியத்  தீவுகள், வங்கதேசம் கிரிக்கெட் அணிகள் டெஸ்ட் அங்கீகாரத்துடன் விளையாடி வருகின்றன. இந்த வரிசையில் ஆப்கானிஸ்தான் 11-வது அணியாகவும், அயர்லாந்து 12-வது அணியாகவும் இணைந்திருக்கின்றன. 

கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தான்

அண்மையில் நடந்த ஐசிசி கூட்டத்தில் இதற்கான முடிவை எடுத்திருக்கிறார்கள். 2005-ம் ஆண்டில் அயர்லாந்து ஒரு நாள் போட்டியில் கலந்துகொண்டது. இந்த அணி பாகிஸ்தான் அணியையும், இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவு அணியையும் வீழ்த்தி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதைப்போலவே, ஆப்கானிஸ்தான் அணி 2009-ம் ஆண்டில் உலகக் கோப்பை தகுதிப் போட்டியில் ஆறாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

கிரிக்கெட் அணி அயர்லாந்து

2016-ம் ஆண்டில் ஒரு நாள் மற்றும் டி-20 போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றிருக்கிறார்கள். டி-20 உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவு அணியையும் வீழ்த்தி ஆச்சர்யப்படுத்தியவர்கள், மேற்கிந்திய தீவில் நடைபெற்ற ஒரு நாள் போட்டி தொடரையும் டிரா செய்திருக்கிறார்கள். 

விரைவில் டெஸ்ட் போட்டியிலும் பிற அணிகளுக்கு ஆப்கானிஸ்தான் அணியும், அயர்லாந்து அணியும் அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பார்கள் என நம்பலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close