Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மெக்காவில் நடக்கவிருந்த பயங்கரவாதிகளின் திட்டத்தை முறியடித்த சவுதி அரசு!

இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான மெக்காவில் நடக்கவிருந்த பயங்கரவாதத் தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக சவுதி அரசு தெரிவித்துள்ளது.

mecca
 

ரம்ஜான் மாதம் என்பதால் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் சவுதியில் உள்ள மெக்காவில் திரண்டு தொழுகை செய்வது வழக்கம். இந்நிலையில், நேற்று மெக்காவில் தொழுகை நடந்துகொண்டிருந்தபோது மசூதிக்குள் நுழைய தீவிரவாதி ஒருவன் முற்பட்டுள்ளான். காவலர்கள் தடுத்து நிறுத்தியபோது உடலில் கட்டிவைத்திருந்த குண்டுகளை வெடிக்க செய்துள்ளான். இந்த குண்டு வெடிப்பில் காவலர்கள் உட்பட 11 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, அந்த தீவிரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். 

மெக்காவில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டது முன்னரே கண்டறியப்பட்டுவிட்டதாக சவுதி அரசு தெரிவித்துள்ளது. சவுதி அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால்தான் மெக்காவின் உள்ளே தீவிரவாதி நுழையாமல் தடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீவிரவாதிகளின் தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதால் உயிர்ப்பலி தவிர்க்கப்பட்டுள்ளது!

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close