Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிரியா ஐஎஸ் முகாம்கள் மீது ரஷ்யா தாக்குதல்!

சிரியாவின் ஐஎஸ்ஐஎஸ் முகாம்கள் மீது மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்தவாறே ரஷ்யா போர்க்கப்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

போர்க்கப்பல் தாக்குதல்

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சிரியாவில் உள்ள பல நகரங்களைக் கைப்பற்றி அரசுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சிரியாவுக்கு ஆதரவாக ரஷ்யா, துருக்கி, இஸ்ரேல் போன்ற நாடுகள் உதவுவதாக அறிவித்திருந்தன. இதனடிப்படையில், சிரியாவில் ஆயுதப் பதுக்கல் முகாம் ஒன்றினை ரஷ்யா போர்க்கப்பல் ஏவுகணை மூலம் தாக்கியுள்ளது.

சிரியாவில் ஹமா மாகாணத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் முகாம் பெரியளவில் அமைந்திருப்பதாக வந்த ஆதாரத்தின் அடிப்படையில் ரஷ்ய போர்க்கப்பல் தாக்குதல் நடத்தி முகாம்களை தகர்த்துள்ளது. மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்தபடியே நடத்தப்பட்ட இத்தாக்குதல் குறித்து துருக்கி, இஸ்ரேல் ராணுவத்துக்கு முன்னறிவிப்பு செய்துவிட்டதாகவும், அமெரிக்காவிடம் மட்டும் தகவல் தெரிவிக்கவில்லை என்றும் ரஷ்யா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் ரஷ்ய போர்க்கப்பல் ஒன்றும், நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றும் ஈடுபடுத்தப்பட்டது என்றும் தீவிரவாத முகாம்கள் மீது ஆறு ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும் ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. சிரியாவில் உள்நாட்டு போர் வலுவடைந்து வரும் நிலையில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்களும் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதாகவே கூறப்படுகிறது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close