Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் சார்பில் சிறப்பாய் நடந்த இயல் விருது விழா!

டொராண்டோவில் 2017, ஜூன்18-ம் தேதி தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 17-வது  இயல் விருது விழா ஸ்காபரோ விருந்து மண்டபத்தில்  சிறப்பாக  நடைபெற்றது.  இந்த வருட தமிழ் இலக்கிய வாழ்நாள் சாதனைக்கான இயல் விருது, கவிஞர் சுகுமாரனுக்கு வழங்கப்பட்டது.  கடந்த 40 ஆண்டுகளுக்குமேலாக கவிதை, புனைவு, கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் எனப் பல துறைகளில் தொடர்ந்து சேவை செய்வதுதான் இவரின் சாதனை.

இயல் விருது விழா

சுந்தர ராமசாமி நினைவாக நிறுவப்பட்ட `காலச்சுவடு அறக்கட்டளை  கணிமை விருது’ த.சீனிவாசனுக்கு  அளிக்கப்பட்டது. புனைவு இலக்கியப் பிரிவில்  `ஆதிரை’ நாவலுக்காக சயந்தனுக்கும், புனைவு இலக்கியப் பிரிவில் `ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ நூலுக்காக திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் மிஷ்கினுக்கும்,  கவிதைப் பிரிவில் `ஆயிரம் சந்தோஷ இலைகள்’  என்ற தொகுப்புக்காக சங்கரராமசுப்ரமணியனுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. மொழிபெயர்ப்பு பிரிவில் `இறுதி மணித்தியாலம்'  என்ற தலைப்பில் சிங்களக் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்த ரிஷான் ஷெரீஃப்புக்கும்,  தமிழிலிருந்து ஜெர்மன் மொழியில் `வாழை இலையும் வீதிப் புழுதியும்’ என்ற தலைப்பில் 14 சிறுகதைகளை மொழிபெயர்த்து, புத்தகமாக வெளியிட்ட ஈவ்லின் மாசிலாமணிக்கும், மாணவர் புலமைப் பரிசுப் போட்டியில் சிறந்த  சிறுகதை எழுதி வென்ற சோபிகா சத்தியசீலனுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ் இலக்கியச் சிறப்பு சாதனை விருதுகளை, இந்த வருடம் டேவிட் ஷுல்மன், இரா.இளங்குமரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இயல் விருது 

சிறப்பு விருந்தினர்களாக வருகைதந்த முனைவர் ரவி குகதாசன், மருத்துவர் சுந்தரேசன் சம்பந்தம் மற்றும் கவிஞர் சேரன் ஆகியோர் சிறப்புரை வழங்கினர். இவர்களை அ.முத்துலிங்கமும் சிவன் இளங்கோவும் மேடையில் அறிமுகம் செய்தனர். பேராசிரியர் சந்திரகாந்தன் தொடக்க உரையும், சட்டவாளர் மனுவல் ஜேசுதாசன் வரவேற்புரையும் நிகழ்த்தினர். கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி,  அரசின் பாராட்டுச் சான்றிதழை கவிஞர் சுகுமாரனுக்கும் இயக்குநர் மிஷ்கினுக்கும் வழங்கினார். கவிஞர் சுகுமாரன், தன் விருதுப் பணத்தில் ஒருபகுதியையும், இயக்குநர் மிஷ்கின் விருதுப் பணம் முழுவதையும் ஹார்வேர்டு தமிழ் இருக்கைக்கு வழங்கி, சபையோரின் பாராட்டைப் பெற்றனர்.

இயல் விருது

மருத்துவர் துஷ்யந்தி ஸ்ரீகரனின் வாழ்த்துரையைத் தொடர்ந்து, உஷா மதிவாணன் நன்றியுரை வழங்கினார். விழா நிகழ்ச்சிகளை அழகாகத் தொகுத்து வழங்கினார் கந்தசாமி கங்காதரன்.  இரவு விருந்துடன் விழா முடிவுக்கு வந்தது. இந்த விழாவுக்கு, பல நாடுகளிலிருந்து எழுத்தாளர்களும் கல்வியாளர்களும் ஆர்வலர்களும் வருகைதந்து சிறப்பித்தார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close