Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ட்ரம்ப்புக்கு எதிரான சர்ச்சை கருத்து: மன்னிப்பு கேட்டார் ஜாக் ஸ்பாரோ!

ஜாக் ஸ்பாரோ புகழ் ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் சில நாள்களுக்கு முன்னர், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்ய வேண்டும் என்ற தொணியில் கருத்து கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் வரவே தற்போது தனது கருத்துக்கு வருந்துவதாக டெப் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து சிறுபான்மையினருக்கு எதிராகவும், கருப்பின மக்களுக்கு எதிராகவும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக எடுத்து வருகிறார். இதனால், ஹாலிவுட் நடிகர்களில் பெரும்பான்மையானோர் ட்ரம்ப்புக்கு எதிரான நிலைப்பாடு எடுத்துள்ளனர். இதையொட்டிதான் டெப், ட்ரம்ப்பை கொலை செய்ய வேண்டும் என்ற தொணியில் கிண்டலாக கூறியிருந்தார். இருப்பினும், இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

குறிப்பாக அமெரிக்க அரசு தரப்பு, 'அதிபர் ட்ரம்ப் எந்த வித வன்முறையையும் எதிர்ப்பவர். ஆனால், ஜானி டெப் போன்றவர்கள் அவரது பாதையை பின்பற்றாதது வருத்தம் அளிக்கின்றது. எனினும் சக நடிகர்கள் டெப்பின் கருத்துக்கு வலுவான கண்டனத்தைப் பதிவு செய்வார்கள் என்று நம்புகிறோம்.' என்று அறிக்கை வெளியிட்டது.  

இதையடுத்து டெப், 'ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு எதிராக நான் கூறிய மட்டமான ஜோக்குக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் சொல்ல வந்தது தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டது. நான் நகைச்சுவை உணர்வுக்காகத்தான் அப்படி கூறினேன். யாரையும் புண்படுத்த அல்ல' என்று மன்னிப்பு கோரினார். 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close