Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெள்ளை மாளிகையில் இப்தார் விருந்து ரத்து... ரம்ஜானுக்கு வாழ்த்து சொன்ன ட்ரம்ப்!

உலகம் முழுவதிலும் இருக்கும் இஸ்லாமியர்கள் நாளை ரம்ஜான் பண்டிகையை கொண்டாட உள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அமெரிக்க மக்கள் சார்பிலும், என் மற்றும் என் மனைவி மெலனியா சார்பிலும் இஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விடுமுறை நாளில் கருணை, அரவணைப்பு மற்றும் நல்லெண்ணங்கள் வளர்த்துக் கொள்வதை நினைவுகொள்ள வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். 

பில் கிளின்டன் அமெரிக்க அதிபராக இருந்த காலத்திலிருந்து ரம்ஜானின்போது வெள்ளை மாளிகையில், இப்தார் விருந்து நடத்தப்பட்டு வந்தது. ஆனால், ட்ரம்ப் அதிபராக பதவியேற்ற பின் அந்த நடைமுறையை ரத்து செய்தார். இந்த செயல் பெரும் சர்ச்சைக்கு உள்ளான நிலையில் அவர், ரம்ஜான் வாழ்த்து கூறியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பதவியேற்ற ட்ரம்ப், முஸ்லிம் நாடுகள் பலவற்றிலிருந்து அந்நாட்டு மக்கள் அமெரிக்காவுக்குள் வருவதற்குத் தடை விதித்தார். இந்தத் தடை உத்தரவுக்கு இடைக்காலத் தடை இப்போது அமலில் உள்ளது

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close