Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாரீஸ் நகரை சுத்தப்படுத்திய தமிழ் இளைஞர்கள்!

தமிழ் இளைஞர்கள்

சுற்றுச்சூழல் விழிப்புஉணர்வுக்காக, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள முக்கிய வீதிகளை அங்கிருக்கும் தமிழ் இளைஞர்கள் நேற்று  (24-06-2017 ) சுத்தம்செய்தனர். 

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தமிழர்கள் அதிகமாக வசித்துவருகிறார்கள். அங்குள்ள தமிழ் இளைஞர்கள், பாரீஸ் மாநகர சபையுடன் இணைந்து, வீதிகளைச் சுத்தம்செய்வதோடு மட்டுமல்லாமல் மக்களுக்கு சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புஉணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். இதனால், பிரான்ஸ் நாட்டு மக்கள் தமிழ் இளைஞர்களை வெகுவாகப் பாராட்டினர். இதுபற்றி அங்குள்ள தமிழ் இளைஞர் ஜே கூறுகையில், "பாரீஸ் நகரின் முக்கிய வீதிகளைச் சுத்தப்படுத்தவும் மக்களுக்கு சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புஉணர்வை ஏற்படுத்தவும் 'பிரான்ஸ் கமல்ஹாசன் நற்பணி மன்றம்' இயக்கத்தின் தலைவர் பிரான்சுவா கஸ்தோன் ஏற்பாடுசெய்திருந்தார்.

அதன்படி, பாரீஸ் மாநகர சபையுடன் இணைந்து செயலாற்றலாம் என முடிவெடுத்தோம். குப்பைகள் அதிகமாக இருக்கும் வீதிகளில் குப்பைகளை அகற்றி, அங்குள்ள மக்களிடம் இனி இதுபோல குப்பைகளை வீசாதீர்கள் என்று கூறி, சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புஉணர்வையும் ஏற்படுத்தினோம். பிரான்சுவா கஸ்தோன், இதற்கு முன் இரண்டு முறை  பாரீஸ் வீதிகளைச் சுத்தப்படுத்தும் பணிகளைச் செய்துள்ளார். இனிவரும் காலங்களிலும் இதுபோன்று தொடர்ந்து செய்துகொண்டிருப்போம்" என்றார்.

தமிழ் இளைஞர்கள்

 

ஜல்லிக்கட்டு, நெடுவாசல், விவசாயிகள் பிரச்னைகளின் போதெல்லாம் அங்குள்ள தமிழ் இளைஞர்கள், தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வந்ததுடன், பிரான்ஸில் உள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிடவும் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற சமூக அக்கறைகொண்ட செயல்களால், அங்குள்ள தமிழ் இளைஞர்களை பிரான்ஸ் மக்கள் வெகுவாகப் பாராட்டிவருகின்றனர்.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close