Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஸ்ரீநகரில் ரம்ஜான் தொழுகைக்குப் பின்னர் கல்லெறித் தாக்குதல்

காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகரின் பல பகுதிகளில் இன்று, ரம்ஜான் கொண்டாட்டத்தையொட்டி சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.


பல இடங்களில், மக்கள் அதிக அளவில் ஒன்றுகூடி சிறப்புத் தொழுகைகள் நடத்தினர். அதிகபட்சமாக, ஹசரத்பல் என்ற இடத்தில் 
50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கூடினர். 

பெரும்பாலான இடங்களில் எந்தவித அசம்பாவிதங்களும் இல்லாமல் அமைதியாகவே தொழுகைகள் நடைபெற்றன. தொழுகைக்குப் பின்னர், சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே கல்லெறிச் சம்பவங்கள் நடந்தன. எனினும், இதுவரை யாரும் காயமடைந்ததாகத் தகவல் இல்லை. ரம்ஜான் தினத்தில் நடந்துள்ள இந்தச் சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பிரிவினைவாதத் தலைவர்களான சயீத் அலி கிலானி மற்றும் மிர்வைஸ் உமர் ஃபரூக் ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்ததாகப் போலீஸார் தெரிவித்தனர். 

ஜம்மு- காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் கைதுசெய்யப்பட்டு ஸ்ரீநகர் மத்தியச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close