Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கத்தாருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுங்கள்: அரபு நாடுகளுக்கு அமெரிக்கா அறிவுரை!

'கத்தார் விவகாரத்தில், அந்த நாட்டுடன் இணைந்து முதலில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுங்கள்' என அரேபிய நாடுகளுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

கத்தார்

தீவிரவாதத்துக்கு துணைபுரிவதாகக் குற்றம்சாட்டப்பட்ட கத்தார் நாடு, வளைகுடா நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. சவுதி, ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட நாடுகள் கத்தாருடனான தங்கள் தூதரக உறவுகள் அனைத்தையும் முறித்துக்கொண்டன. வான் வழியிலும் கடல் வழியிலும் கத்தார் விமானங்கள், கப்பல்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், கத்தார் தூதர்களையும் நாடு திரும்ப உத்தரவிடப்பட்டது.

 

இந்த நிலையில் கத்தாருக்கு, அரேபிய நாடுகள் 13 நிபந்தனைகள் விதித்து தடைக்கு விலக்குப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்தது. இதன்படி, கத்தார், ஈரானுடனான தொடர்பைத் துண்டித்துக்கொள்ள வேண்டுமெனவும், அல்ஜசீரா தொலைக்காட்சியை ரத்துசெய்ய வேண்டும் உள்ளிட்ட 13 நிபந்தனைகள் கத்தாருக்கு விதிக்கப்பட்டன. ஆனால், இந்த நிபந்தனைகளுக்கு சம்மதிக்க முடியாதென கத்தார் மறுப்பு தெரிவித்துவிட்டது. இதைத் தொடர்ந்து, கத்தார் மற்றும் அரேபிய நாடுகளுக்கு இடையேயான மோதல்போக்கு அதிகரித்தது.

தற்போது, இந்த மோதல்போக்கை விடுத்து, சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டுமென அரேபிய நாடுகளுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், ‘மோதல் போக்கைக் விடுத்து, கத்தார் உடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் அரேபிய நாடுகள் ஈடுபட வேண்டும். அரேபிய நாடுகள் கத்தாருக்கு விதித்த நிபந்தனைகள் யாவும் நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளன’ என்றார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close