Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போதைப்பொருள் எதிர்ப்பு தினம் : கம்போடியா அரசு உலகுக்குக் கற்றுக்கொடுத்துள்ள பாடம்!

சர்வதேசப் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் எதிர்ப்புத் தினத்தையொட்டி கம்போடியாவில் வித்தியாசமான விழிப்புஉணர்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளனர். 

cambodia
 

தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் சமீப காலமாகவே போதைப்பொருள்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. உலக நாடுகளுக்குக் கம்போடியாவிலிருந்து போதைப்பொருள்கள் சப்ளை செய்யப்படுவதாகப் பரவலாகப் பேசப்பட்டது. போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்க கம்போடியா அரசாங்கம் ஆறு மாத விழிப்புஉணர்வு முகாம் நடத்தியது. கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய இந்த முகாமில் கம்போடியா முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலைக் கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். 

இந்த நிகழ்வின்போது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 9,370 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 100 கிலோவுக்கு மேற்பட்ட போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போதைக்கு அடிமையான  20,621 பேரை மீட்டு மறுவாழ்வு அளித்து வருகிறது கம்போடிய அரசு. இன்று சர்வதேச போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் எதிர்ப்பு தினம் என்பதால், கடந்த சில 7 மாதங்களில் பறிமுதல் செய்த போதைப்பொருள்களை ஒரே இடத்தில்வைத்து எரித்துள்ளனர். இந்த நிகழ்வு உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கட்டும் என்று கம்போடியா அரசு தெரிவித்துள்ளது. சுமார்  4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள 126,31 கிலோ போதைப்பொருள்களை எரித்ததாகக் கம்போடியாவின் போதைப்பொருள் தடுப்புப்பிரிவின் செயலாளர் மீஸ் வ்ரித் தெரிவித்துள்ளார். 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close