Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் உற்சாக வரவேற்பு

அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றிருக்கும் மோடியை அதிபர் டிரம்ப்பும், மெலனியாவும் சிவப்புக் கம்பள உபசரிப்போடு வெள்ளை மாளிகைக்குள் வரவேற்றார்கள்.

மோடி ட்ரம்ப்

அமெரிக்கா சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்பைச் சந்தித்தார். இதையடுத்து  அவர்கள் இருவரும் வெள்ளை மாளிகையில் உள்ள அறையில் உரையாடினார்கள். அப்போது பிரதமர் மோடி குறித்து அதிபர் ட்ரம்ப், "மோடி ஒரு சிறந்த பிரதமர். அவரைப் பற்றி படித்தும், கேள்விப்பட்டும் நிறைய தெரிந்துகொண்டுள்ளேன். அவர் இந்தியாவைப் பொருளாதார ரீதியாக சிறப்பாக முன்னேற்றிக்கொண்டிருக்கிறார்" என்று கூறினார்.

இதையடுத்துப் பேசிய பிரதமர் மோடி, "ட்ரம்ப்பும், மெலனியாவும் சிறப்பான வரவேற்பை அளித்தனர். இந்த வரவேற்பானது இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பாகப் பார்க்கிறேன். இந்த சந்திப்பில் நான் பேச நிறைய இருக்கிறது. மேலும், அமெரிக்க அதிபர் இந்தியாவின் முன்னேற்றத்தின்மீது ஆர்வமாக இருக்கிறார்" என்று கூறியுள்ளார். 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close