Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மோடி வேண்டுகோள்!

'நெதர்லாந்தில் வாழும் இந்தியர்கள், இந்தியாவின் வளர்ச்சியில் பங்குகொள்ள வேண்டும்' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மோடி

மூன்று நாள் சுற்றுப்பயணமாக போர்ச்சுக்கல், அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளார் பிரதமர் மோடி.நேற்று அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில், அதிபர் ட்ரம்ப்பை அவர் சந்தித்தார். இந்தச் சந்திப்பில், இரு நாட்டு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், அமெரிக்காவில் உள்ள முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் கலந்துகொண்ட மாநாட்டிலும் அவர் கலந்துகொண்டார்.

இந்த நிலையில், அமெரிக்காவிலிருந்து நெதர்லாந்து வந்த மோடி, நெதர்லாந்து அரசரையும் பிரதமரையும் சந்தித்தார். இதையடுத்து, நெதர்லாந்தில் வாழும் இந்தியர்களை அவர் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது பேசிய மோடி, "ஐரோப்பாவில், இங்கிலாந்துக்குப் பின் நெதர்லாந்தில்தான் அதிகமான இந்தியர்கள் வாழ்கின்றனர். இங்கு வாழும் இந்தியர்கள், இந்தியாவின் வளர்ச்சியில் பங்குகொள்ள வேண்டும். மேலும், நெதர்லாந்தில் உள்ள இந்தியர்கள் 'நரேந்திர மோடி' செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். அப்போது, உங்கள் பிரதமர் உங்கள் பைகளில் இருப்பார்" என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close