Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிரியா, ரஷ்யா மற்றும் ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

"மீண்டும் ரசாயனத் தாக்குதலை நடத்த நினைத்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" என்று சிரியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார், ஐநா-வின் அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலி.

நிக்கி ஹேலி

சிரியாவில், கடந்த ஏப்ரல் மாதம் ரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டது. கிளர்ச்சியாளர்கள் பதுங்கியிருந்த இடத்தில் நடத்தப்பட்ட இந்த ரசாயனத் தாக்குதலில், அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்தனர். இதற்கு, பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன. மேலும், இந்தத் தாக்குதலைக் கண்டித்து அமெரிக்கா, சிரியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில், சிரியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார், ஐநா-வின் அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலி. இதுகுறித்துப் பேசிய அவர், "மீண்டும் ஒரு ரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்கான கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இந்த எச்சரிக்கை சிரியாவுக்கு மட்டும் அல்ல, சிரியாவுக்கு ஆதரவளித்துவரும் ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளும் இதுகுறித்து சிந்திக்க வேண்டும். அப்பாவி பொதுமக்களும் பெண்களும் குழந்தைகளும் பாதிக்கக்கூடாது என்பதை சிரிய அதிபர் அசாத் புரிந்துகொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close