Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆசிய நாடுகளுக்குச் சவால்விடும் சீனாவின் அதிநவீன போர்க் கப்பல்!

சீன அரசு, அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட '055 டெஸ்ட்ராயர்' போர்க் கப்பலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை ஆசிய நாடுகளிடம் இல்லாத அளவுக்கு அதிநவீன தொழில்நுட்பங்கள் இந்தப் போர்க் கப்பலில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

சீனப் போர்க் கப்பல்

இந்தப் போர்க் கப்பலை அறிமுகப்படுத்தியது குறித்து சீன அரசுத் தரப்பு, 'இந்தப் புது கப்பலின் மூலம் சீனக் கப்பல்படை மேம்பாடு காண முடியும். இந்தக் கப்பலில், இதுவரை இல்லாத அளவுக்கு வசதிகள்கொண்ட புதுவித ஏவுகணைகள், கப்பல்கள், நீர் மூழ்கிக் கப்பல்கள் உள்ளன' என்று கூறியுள்ளது. இந்தக் கப்பலின் அளவுக்கோ வசதிக்கோ இந்தியக் கப்பல் படையிடம் எந்தப் போர்க் கப்பலும் இல்லை என்றே கூறப்படுகிறது. இந்தப் போர்க் கப்பல் முழுக்க முழுக்க சீனாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் போர்க் கப்பல் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்னர், பல கட்ட சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close