Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காதலி அன்டோனெல்லாவை கரம்பிடிக்கும் மெஸ்ஸி!

messi

பிரபல கால்பந்தாட்ட வீரர் லயோனல் மெஸ்ஸி, தன் காதலி அன்டோனெல்லாவை இன்று திருமணம் செய்துகொள்கிறார். அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் லயோனல் மெஸ்ஸி, தனது சாதுர்ய ஆட்டத்தால் எதிரணியினரைத் திணறடிப்பதில் வல்லவர். உலகளவில் கால்பந்து விளையாட்டில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ள மெஸ்ஸி, தன் சிறுவயது தோழியும் காதலியுமான அன்டோனெல்லா ரோகுசோவை இன்று திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் கடந்த சில வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்.

மெஸ்ஸி - அன்டோனெல்லா ஜோடிக்கு தியாகோ (4 வயது), ஒரு வயதில் மேடியோ என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், காதலி அன்டோனெல்லாவை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த மெஸ்ஸி, சமீபத்தில் அதை வெளிப்படையாகத் தெரிவித்தார். இதையடுத்து, மெஸ்ஸியின் சொந்த ஊரான ரொசாரியோவில் இன்று திருமணம் நடக்க இருக்கிறது. இந்தத் திருமண நிகழ்ச்சிக்கு 260 பேருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரபல கால்பந்தாட்ட வீரர்களான நெய்மர், லூயிஸ் சுவாரஸ், ஜெரார்ட் பிக், பிரபல பாப் பாடகி ஷகிரா ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close