Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமைதிக்காக இந்தியா செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா?

இந்தியா, தற்போது வரை ஐநா-வின் அமைதிப் பணிகளுக்கான நிதிக்கு மட்டும் ஐந்து மில்லியன் டாலர் செலவிட்டுள்ளது.

UN peace building


உலக நாடுகளின் நிதி மற்றும் ராணுவப் பங்களிப்பின் உதவியுடன் அமைதிப் பணிகளில்  ஐநா ஈடுபட்டுவருகிறது. 2005-ம் ஆண்டு, தொடங்கியது முதலே இந்தியா இதில் உறுப்பினராக இருந்துவருகிறது. இதில், உறுப்பினராக இருக்கும் நாடுகள் அளிக்கும் நிதி மற்றும் ராணுவ உதவிகளைக்கொண்டு, போர் நடக்கும் நாடுகள், உள்நாட்டுப் போர்களால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள், பயங்கரவாதத்தால் பாதிப்புக்கு உள்ளான நாடுகளில் அமைதி நிலவ, பணிகளை மேற்கொள்ளும்.

இந்தியா தற்போது வரை சுமார் 5 மில்லியன் டாலர் வரை  ஐநா-வுக்கு நிதியாக வழங்கியுள்ளது. அது மட்டுமல்லாமல், ராணுவ உதவிகளையும் வழங்கிவருகிறது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் கீழ்தான் அமைதிக்கான இந்தப் பணிகள் நடைபெற்றுக்கொண்டு வருகின்றன. இதனிடையே, அமைதிக்காக அளிக்கும் நிதியை அமெரிக்கா குறைக்க முடிவுசெய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், போதுமான நிதி உள்ளதால், இந்த நிதிக் குறைப்பில் எந்தத் தவறும் இல்லை என்றே அமெரிக்கா கூறியுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close