Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமெரிக்க இரவு விடுதியில் துப்பாக்கிச்சூடு.. 28 பேர் படுகாயம்!

us

அமெரிக்காவின் இரவு விடுதி ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர். அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் நகரில் உள்ள க்ளப்பில் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. அங்குள்ள லிட்டில் ராக் பகுதியில் அதிகாலை 2.30 மணிக்கு க்ளப்புக்குள் நுழைந்த மர்ம நபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். வார இறுதி நாள் என்பதால், அங்கு ஏராளமானோர் வந்திருந்தனர்.

இந்த தாக்குதலில், 16 வயது சிறுவன் உட்பட மொத்தம் 28 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பயங்கரவாத அமைப்பினர் யாருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close