Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தென் சீனக் கடலில் போர்க்கப்பல்: ஆர்ப்பரிக்கும் அமெரிக்கா.. ஆத்திரத்தில் சீனா!

தென் சீனக் கடலில், சர்ச்சைக்குரிய பகுதியில் அமெரிக்கப் போர்க்கப்பல் பயணம் செய்ததால், சீனா கடும் ஆத்திரத்தில் உள்ளது.

போர்க்கப்பல்

Representative image

தென் சீனக் கடல் பகுதியில் பல குட்டித்தீவுகள் உள்ளன. சர்வதேச அளவில், மிகப்பெரிய வர்த்தக மையமாகத் திகழ்கிறது தென்சீனக் கடல். இதனாலேயே, இந்தப் பகுதியில் உள்ள குட்டிக் குட்டித் தீவுகளுக்காக, உலக நாடுகளுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவிவருகிறது. இந்தப் பகுதியில் உள்ள ’டிரைடன்’ என்னும் தீவை சீனா ஆக்கிரமித்துள்ளது. இதே தீவை, தைவான் மற்றும் வியட்நாம் நாடுகள் சொந்தம் கொண்டாடிவருகின்றன.

 சர்ச்சைக்குரிய இந்தப் பகுதியில்தான் சமீபத்தில், அமெரிக்கப் போர்க்கப்பல் கடந்துசென்றுள்ளது. இதனால், கடும் ஆத்திரத்தில் சீனா உள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து அமெரிக்க ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ‘சர்வதேச கடல் வழி மார்க்கங்களில் சுதந்திரமாக எல்லா நாட்டுக் கப்பல்களும் பயணம் செய்ய முடியும் என்பதாலேயே, அமெரிக்கப் போர்க்கப்பல் அவ்வழியாகச் சென்றது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் சீனா தரப்பில், 'அமெரிக்காவின் இந்தச்செயல் கோபமூட்டுவதாக உள்ளது. சர்ச்சைக்குரிய பகுதியில் அனுமதியின்றி போர்க்கப்பல் ஒன்று பயணம் செய்வது முறையல்ல’ எனத் தெரிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற செயல்களைக் குறைத்துக்கொள்ள வேண்டுமென அமெரிக்காவை சீனா எச்சரித்துள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close