Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெறுக்கத்தக்கப் பதிவுகளை நீக்காவிட்டால் இதுதான் நடக்கும்! ஃபேஸ்புக், ட்விட்டரை எச்சரிக்கும் நாடு

வெறுக்கத்தக்கப் பதிவுகளை சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து நீக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என ஜெர்மனியில் புதிய சட்டம் ஒன்று அமலாகியுள்ளது.

சமூக வலைதளங்கள்

சட்டவிரோதமாக சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் கருத்துப் பதிவுகளை நீக்குமாறு ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களுக்கு ஜெர்மனி அறிவுறுத்தியுள்ளது. இதற்கு காலதாமதமானால் 50 மில்லியன் யூரோக்களை அபராதமாகச் செலுத்த வேண்டும் என சட்டமே இயற்றியுள்ளது ஜெர்மனி அரசு.

ஜெர்மனி நாட்டில் இம்மாதிரியான சமூக வலைதளங்கள் மூலமாகவே தீவிரவாதமும், வன்முறையைத் தூண்டும் நிகழ்வுகளும் அதிகரித்து வருவதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுபோன்று சாதி, இனம், மதம், பிரிவினைவாதம் தொடர்பான பதிவுகளை, கருத்துகளை வெளியிடப்பட்ட 24 மணி நேரத்துக்குள் நீக்கப்பட்டுவிட வேண்டும். அவ்வாறு நீக்கப்படவில்லையெனில் அந்த சமூக வலைதள நிறுவனத்துக்கு அதிகப்படியான அபராதம் விதிக்கப்படுமென ஜெர்மனி அரசு அறிவித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close