Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மகாத்மா காந்தி சுபாஷ் சந்திர போஸுக்கு எழுதிய கடிதம் ஏலம்!

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முகியப்பங்கு வகித்த மகாத்மா காந்தி, 1931-ம் ஆண்டில் பிரிட்டனில் நடந்த வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்ற்றார். அப்போது, ஜான் ஹெண்ட்ரி என்ற ஓவியர் பென்சிலால் காந்தியின் முழு உருவத்தையும் ஓவியமாக வரைந்தார். அந்த ஓவியமானது தற்போது, பிரிட்டனை சேர்ந்த சோத்பைஸ் நிறுவனத்தின் மூலம் வரும் 11-ம் தேதி ஏலத்திற்கு வருகிறது. இந்திய மதிப்பில் 6.72 லட்சம் ரூபாயிலிருந்து, 10 லட்சம் ரூபாய் வரை ஏலம் போக வாய்ப்பு இருப்பதாக  அந்நிறுவனம் கணித்துள்ளது. 

இந்த ஓவியத்துடன் சேர்த்து 1940-ம் ஆண்டு மகாத்மா காந்தி தனது கையால், சுபாஷ் சந்திர போஸுக்கு எழுதப்பட்ட கடிதங்களும் ஏலத்தில் விடப்படுகிறது எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் அந்நிறுவனம்,  சுபாஷ் சந்திர போஸின் கருத்துக்களுக்கு நேர்மாறான கருத்துக்களை கொண்டிருந்த காந்தி, அவரைப்பற்றி தனது கருத்துக்களை அந்த கடிதத்தில் எழுதியுள்ளதாக சொல்கிறது. எல்லா கடிதங்களும் சேர்த்து 27 லட்ச ரூபாய்க்கு ஏலம் போகும் எனவும் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close