Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதலையைத் திருமணம் செய்த மேயர்!

மெக்சிகோவில் நகர மேயர் ஒருவர் முதலையைத் திருமணம் செய்துள்ளார். 

Mayor weds Crocodile

மழை வர வேண்டியும், ஊர் நலனுக்காகவும் கழுதை மற்றும் நாய் உள்ளிட்ட உயிரினங்களை மனிதர்கள் திருமணம் செய்துகொள்வது வழக்கம். இந்தக் காட்சிகள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே நடந்து வருகிறது. இந்நிலையில், மெக்சிகோவில் மேயர் ஒருவர் முதலையைத் திருமணம் செய்துள்ளார்.

தெற்கு மெக்சிகோ பகுதியைச் சேர்ந்த மேயர் விக்டர் அகிலர். மீனவ நகரமான அங்கு, மீன்பிடித் தொழில் நலனுக்காக, கடல் வாழ் உயிரினங்களை மனிதர்கள் திருமணம் செய்துகொள்வது வழக்கம். அதன்படி, மீன்பிடித் தொழில் செழிப்படைய வேண்டி விக்டர், முதலைக் குட்டி ஒன்றை மணந்துள்ளார். மணப்பெண்ணைப் போலவே முதலைக் குட்டிக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, முதலைக் குட்டியுடன் ஊர்வலமாக வந்து மேயர் திருமணம் செய்துகொண்டார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close