Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெண் மீன்களாக மாறிவரும் ஆண் மீன்கள்... திடுக் ஆய்வு முடிவு!

சாக்கடையிலிருந்து வெளியேற்றப்படும் ரசாயனங்களால் நன்னீரில் (Fresh Water) உள்ள ஆண் மீன்கள் டிரான்ஜெண்டராக மாறி வருவதாக பிரிட்டன் ஆராய்ச்சியாளர் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

transgender fish

 

இங்கிலாந்தில் உள்ள எக்ஸீட்டர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சார்லஸ் டெய்லர், ஏரி, குளங்களில் வாழும் மீன்கள் குறித்த அவரின் ஆய்வை கருத்தரங்கு ஒன்றில் சமர்ப்பித்தார். அவர் நடத்திய ஆய்வில் நன்னீரில் உள்ள ஆண் மீன்கள் பெண் மீன்களாக மாறி வருவதும், அவற்றில் சில முட்டையிடுவதாகவும் தெரியவந்துள்ளது.

ஆண் மீன்களின் இந்த குணாதிசயங்களுக்கு காரணம் என்ன?

வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஏரி, குளங்களில் கலக்கின்றன. அந்தக் கழிவு நீரில் கருத்தடை மாத்திரைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனம் கலந்துள்ளதாம். இதனால், ஆண் மீன்களுக்கு பெண்  மீன்களின் குணாதிசயங்கள் ஏற்படுகிறது. கருத்தடை ரசாயனம் போன்று 200 வெவ்வேறு தன்மையுடைய ரசாயனங்களாலும் இந்த விளைவு ஏற்படுகிறதாம். சார்லஸ் டெய்லர் பிரிட்டனில் உள்ள நன்னீர் மீன்களை ஆய்வுக்குட்படுத்தியுள்ளார்.  அதில் 20% ஆண் மீன்களுக்கு பெண் மீன்களின் குணாதிசயங்களும் இருந்துள்ளது.

இதுபோன்று பெண்ணாக மாறும் ஆண் மீன்களின் (transgender /intersex fish) விந்து தரம் குறைந்து வருவதாகவும், சில ஆண் மீன்கள் முட்டையிடுவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

’பிரிட்டனில் மட்டுமல்ல உலகம் முழுவதும் அனைத்து நன்னீர் மீன்களுக்கும் இதே கதிதான். கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவரும் மீன் இனத்தை காப்பாற்ற சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்’ என்று சார்லஸ் டெய்லர் வலியுறுத்தியுள்ளார். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close