Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் பொதுவான சவால்கள் உள்ளன!'' - பிரதமர் மோடி

மோடி

''இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் பொதுவான சவால்கள் உள்ளன'' என மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு நடந்த விழாவில் பேசியுள்ளார்.

அரசுமுறைப் பயணமாக மூன்று நாள்கள் இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு டெல் அவிவ் நகரில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் மோடியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்நாயுஹு வரவேற்றார். அமெரிக்க அதிபர், போப் ஆண்டவருக்கு இணையாகப் பிரதமர் மோடிக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மோடி ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 

இதையடுத்து நடந்த விழாவில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு, ''இந்தியப் பிரதமர் எங்கள் நாட்டுக்கு வருவதற்கு நாங்கள் 70 ஆண்டுகள் காத்திருந்தோம். இந்தியாவை நாங்கள் நேசிக்கிறோம். இந்தியக் கலாசாரம், வரலாறு, ஜனநாயகம் கண்டு வியக்கிறேன். மிகச்சிறந்த சர்வதேச தலைவர்களில் ஒருவர் மோடி.. இருநாடுகளின் நட்புக்கு வானமே எல்லை. இன்னும் நாம் ஒருங்கிணைந்து மேலும் சிறப்பான பணிகளை மேற்கொள்ள முடியும்'' என்றார்.

தொடர்ந்து பேசிய மோடி, ''எனது இஸ்ரேல் பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. 'முதல் முறையாக இஸ்ரேல் வந்த பிரதமர்' என்ற வகையில் பெருமை அடைகிறேன். இஸ்ரேல் பழைமையான கலாசார நாடாக இருந்தபோதிலும், இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொண்டது. இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் பொதுவான சவால்கள் உள்ளன. பயங்கரவாதம் உள்ளிட்ட சவால்களிலிருந்து சமூகத்தைப் பாதுகாக்க வேண்டும். இந்தியாவின் வளர்ச்சியில் இஸ்ரேல் முக்கியப் பங்கு வகிக்கிறது. இஸ்ரேல், இந்தியாவின் மிக நெருங்கிய கூட்டாளியான நாடு. இரு நாடுகளுடன் நாங்கள் இணைந்து செயல்படுவோம்'' என்றார்.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close