Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'1962-ம் ஆண்டைவிட அதிக இழப்பைச் சந்திக்க நேரிடும்!'- இந்தியாவை எச்சரிக்கும் சீனா

பூட்டான் எல்லையில் இந்தியா - சீனா நாடுகளுக்கு இடையில் பிரச்னை நிலவிவரும் நிலையில், சீன அரசின் ஊடக நிறுவனங்களில் ஒன்றான 'க்ளோபல் டைம்ஸ்' பத்திரிகையில், 'இந்தியா - சீனாவுக்கு இடையில் போர் வந்தால், இந்தியா அதிக இழப்பைச் சந்திக்க நேரிடும்' என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. 1962-ம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில் நடந்த போரைச் சுட்டிக்காட்டி, இப்படி கருத்துக் கூறியுள்ளது சீனா. 

இந்திய எல்லையில் ராணுவ வீரர்கள்

இந்தியா மற்றும் பூட்டான் எல்லைக்குள் சீனா அத்துமீறி நுழைந்து, சிக்கிம் செக்டாரில் சாலை கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது என்பதுதான் இந்தியாவின் குற்றச்சாட்டு. ஆனால், இந்தியாதான் இரு நாடுகளுக்கும் இடையில் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டுவருகிறது என்று சீனா குற்றம் சுமத்தியுள்ளது. 

முன்னர், இந்தப் பிரச்னை குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ‘சீனா, பூட்டானின் நிலப்பகுதியை உரிமை கோருகிறது என்பதை பூட்டான் அரசு தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. இந்திய எல்லையை ஒட்டியுள்ள பூட்டானின் எல்லைப் பகுதியை சீனா ஆக்கிரமிக்க நினைக்கிறது. இந்தியாவும் பூட்டானும் எல்லைப் பகுதியைப் பாதுகாக்கும் உடன்படிக்கையை மேற்கொண்டுள்ளன. அந்தப் பகுதியில் போடப்பட்டுள்ள பாதுகாப்புப் படைகளை இந்தியா திரும்பப் பெறாது. சீனா, 1962-ம் ஆண்டு போரை நினைவுபடுத்தி, இந்தியாவை எச்சரித்துள்ளது. 1962-ம் ஆண்டு இருந்த இந்தியா வேறு; இப்போது இருக்கும் இந்தியாவின் நிலை வேறு’ என்று குறிப்பிட்டார்.

சீன கொடி

இதற்குப் பதிலடிகொடுக்கும் வகையில், சீனாவின் 'க்ளோபல் டைம்ஸ்' பத்திரிகை, 'இந்தியா போருக்குத் தயார் என்று கருதினால், சீனா அதன் ராணுவ பலத்தைக் காட்டவேண்டியிருக்கும். ஜெட்லி சொன்னது ஒரு விதத்தில் சரிதான். 1962-ம் ஆண்டு இருந்த இந்தியா வேறு; இப்போது இருக்கும் இந்தியா வேறுதான். போர் வந்தால், 1962-ம் ஆண்டைவிட இந்தியாவுக்கு இப்போது இழப்பு அதிகமாக இருக்கும். ஆனால், இரு தரப்பும் அமைதியாகப் போக வாய்ப்பு இருக்கிறது. இந்தியா, தனது தவறைப் புரிந்துகொண்டு, பூட்டான் எல்லையிலிருந்து படைகளை உடனே பெற வேண்டும்' என்று எச்சரிக்கை விடும் தொனியில் செய்தி வெளியிட்டுள்ளது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close