Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

யோகா செய்யப்போகிறார் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு!

விரைவில் இஸ்ரேல் நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு யோகா செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பெஞ்சமின் நேதன்யாஹு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேலுக்கு மூன்று நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தச் சந்திப்பின்போது இரு நாட்டு உறவை மேம்படுத்துவது குறித்தும் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் மோடி நேதன்யாஹுவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நேதன்யாஹு, 'நான் ஓர் உண்மையைச் சொல்லியே ஆக வேண்டும். பிரதமர் நரேந்திர மோடிக்கு யோகாமீது இருக்கும் ஆர்வம் மற்றும் ஈடுபாடு என்னை வெகுவாக ஈர்த்துள்ளது. என்னை மிகச் சாதாரண யோகாவை முதலில் பயிற்சி செய்யச் சொல்லி மோடி அறிவுறுத்தியுள்ளார். எனவே, நான் சீக்கிரம் யோகா செய்ய ஆரம்பிக்க உள்ளேன்' என்று தெரிவித்துள்ளார். 

மோடியுடன் நேதன்யாஹு

முன்னர், இஸ்ரேலில் உள்ள டென்சிகர் மலர்ப் பண்ணையைப் பார்வையிட்டார் மோடி. அவரைக் கெளரவிக்கும் விதமாக, இஸ்ரேலி க்ரைசாந்துமன் என்ற மலருக்கு ‘மோடி’ என்று அந்தப் பண்ணை நிர்வாகம் பெயர் சூட்டியது. இஸ்ரேலி க்ரைசாந்துமன் என்ற மலரானது, வேகமாக வளரக்கூடிய ரகத்தைச் சேர்ந்தது. இனிமேல், அது ‘மோடி’ என அழைக்கப்படும் என்று இஸ்ரேல் அரசும் மத்திய வெளியுறவு அமைச்சகமும் தெரிவித்துள்ளன. 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close