Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மோசுலில், ஈராக் ராணுவத்துக்கும் ஐஎஸ் அமைப்புக்கும் மோதல் வலுக்கிறது... அகதிகளாகும் குடும்பங்கள்!

ஈராக்கின் மோசுல் நகரத்தில், ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கும் ஈராக் நாட்டு ராணுவத்துக்கும் மோதல் உச்சகட்டத்தில் இருக்கிறது. இதனால், அங்கிருக்கும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன. 

ஈராக் மோசுல்

கடந்த சில ஆண்டுகளாகவே, ஐஎஸ் அமைப்புக்கும் ஈராக் நாட்டு ராணுவத்தினருக்கும் போர் நடந்துவருகிறது. இரு தரப்பும், தொடர்ந்து மக்கள் வாழும் பகுதியில் புகுந்து சண்டையிட்டுவருவதால், ஈராக்கில் அன்றாட வாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.  மேற்கு மோசுல் பகுதியில், கடந்த 24 மணி நேரத்தில் இந்த இரு தரப்புக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது. இதனால், 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்துள்ளன. மேலும், பல குடும்பங்கள் தொடர்ந்து மோசுலில் இருந்து வெளியேறி வருவதாகக் கூறப்படுகிறது. 

இந்த மோதலில், இரு தரப்புக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வந்துகொண்டிருக்கிறது. இதில், ஈராக் ராணுவம் மோசுலின் முக்கியமான சில பகுதிகளைப் பிடித்துள்ளபோதும் பெரும்பான்மையான பகுதிகள் ஐஎஸ் அமைப்பிடம் உள்ளதாகக் கூறப்படுகிறது. வடக்கு ஈராக்கில், ஐஎஸ் அமைப்பிடம் இருக்கும் கடைசி முக்கியப் பகுதி, மோசுல்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close