Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''வட கொரியா மோசமாகச் செயல்படுகிறது!''  அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ட்ரம்ப்

''வட கொரியா மோசமாகச் செயல்படுகிறது'' என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்  கடுமையாகச் சாடியுள்ளார்.

வட கொரியா, தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனைகளை நடத்திவருகிறது.  அமெரிக்காவின் சுதந்திர தினமான கடந்த 4-ம் தேதியன்றுகூட மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணைச் சோதனையை நடத்தியது. இதற்குப் பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ''இது, மிகமிகத் தவறான சம்பவம். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதற்காக, வட கொரியா வெட்கப்பட வேண்டும். அவர்கள், மீண்டும் மோசமாகச் செயல்பட்டுவருகின்றனர். இதைத் தடுக்கும் வகையில் நாம் ஏதாவது செய்தாக வேண்டும். இதனால், உலக நாடுகள் இடையிலான அமைதி சீர்குலைய வாய்ப்புள்ளது. இந்தச் செயல், உலகளாவிய அச்சுறுத்தலாகும். வட கொரியாவின் இதுபோன்ற செயல்கள்குறித்து நான் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. என்ன நடைபெறுகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நாம் அனைவரும் நினைப்பது போன்று, நான் சில முக்கியப் பிரச்னைகள்குறித்து ஆலோசித்துவருகிறேன். அதற்காக நாம் அதைச் செய்ய அவசியமில்லை. நான் எதையும் வரையறுப்பதில்லை'' என்றார். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close